உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கிலிருந்து சரவணபவன், திலீப் விடுவிப்பு - நீதிமன்றில் சுமந்திரன் தவராசா ஆஜர் - Yarl Voice உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கிலிருந்து சரவணபவன், திலீப் விடுவிப்பு - நீதிமன்றில் சுமந்திரன் தவராசா ஆஜர் - Yarl Voice

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கிலிருந்து சரவணபவன், திலீப் விடுவிப்பு - நீதிமன்றில் சுமந்திரன் தவராசா ஆஜர்



உதயன் பத்திரிகையில் தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி திலீப் அமுதன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகிய கே.வி. தவராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகளாகிய திருக்குமரன், ஆனோல்ட் பிரியந்தன், கணதீபன், ரிசிகேஷன், சலேசியஸ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post