வெளியானது ஜெய் சுல்தான் வீடியோ சாங்! யூ டியூபில் வைரல் - Yarl Voice வெளியானது ஜெய் சுல்தான் வீடியோ சாங்! யூ டியூபில் வைரல் - Yarl Voice

வெளியானது ஜெய் சுல்தான் வீடியோ சாங்! யூ டியூபில் வைரல்
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான். இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு ஜெய் சுல்தான் பாடலை வெளியிட்டுள்ளது.

கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு கடந்த 4 மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்த படம் மாஸ்டர் மட்டுமே.

 திரையரங்கங்களுக்கு மாஸ்டர் திரைப்படம் மாற்றத்தை தந்தது போலவே சுல்தான் திரைப்படம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் தயாரிப்பாளரும் அதற்காகவே திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறார்.படத்தின் ட்ரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

 ஆக்ஷன், லவ் காட்சிகள் நிறைந்த ட்ரைலரில் வசனங்கள் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தது. தன்னை 100 தல ராவணன் என்று கார்த்தி வசனம் சொல்லும் காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

 திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது. படக்குழு படத்தில் இருந்து மூன்று பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளது. 

அனிருத் குரலில் 'ஜெய் சுல்தான்', சிம்பு குரலில் 'யாரையும் இவளோ அழகா பார்க்கல' , மற்றும் மற்றொரு பாடலான 'எப்படி இருந்த நாங்க' என மூன்று பாடல்களை வெளியிட்டுள்ளது. பாடல்களும் தொடர்ந்து வைரலாகி வருகிறது. குறிப்பாக அனிருத் பாடிய ஜெய் சுல்தான் பட்டையை கிளப்பி வருகிறது

முன்னதாக ஜெய் சுல்தான் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படக்குழு வீடியோ சாங்கை வெளியிட்டுள்ளது. 

ரவுடிகளுடன் கார்த்தி போடும் குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. யூ டியூபில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post