அசாத் சாலிக்கு ஒன்றரை வருடங்களுக்கு காவல் ? பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன - Yarl Voice அசாத் சாலிக்கு ஒன்றரை வருடங்களுக்கு காவல் ? பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன - Yarl Voice

அசாத் சாலிக்கு ஒன்றரை வருடங்களுக்கு காவல் ? பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன




கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை ஒன்றரை வருடங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்கவும் முடியுமென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றார்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதன் பின்னரான சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணைணகள் நடத்தப்படுகின்றன. சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

விசாரணைகள் முடிவடையும் வரையில் சட்டத்தின்படி அவரை கூடியளவு ஒன்றரை வருடங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்கவும் முடியும். அதற்கு முன்னர் விசாரணை முடிவடைந்தால் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post