மியன்மாரில் ஜனநாய ஆட்சிமுறையை மீண்டும் ஏற்படுத்தவேண்டும் என இலங்கை அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கான மியன்மார் அரசபிரதிநிதிகளின் அடுத்தமாத உத்தேச விஜயத்தின்போது மியன்மாரில் ஜனநாயக கட்டமைப்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கான வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் விடுக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
நான்காம் நூற்றாண்டு முதல் இரு நாடுகளிற்கும் இடையில் உறவுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கியதேசிய கட்சி இந்த நெருக்கமான உறவை பயன்படுத்தி மியன்மாரில் தற்போது தொடரும் வன்முறைகளை நிறுவத்திற்கான அழுத்தங்களை அரசாங்கம் கொடுக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை மீள இயங்கச்செய்வதற்கான அழுத்தங்களை அரசாங்கம் கொடுக்கவேண்டும் எனவும் ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment