காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்தை இடமாற்றுவதை நிறுத்த வேண்டும் - வடக்கு ஆளுநர், யாழ் அரச அதிபருக்கு முன்னணி மகஜர் - Yarl Voice காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்தை இடமாற்றுவதை நிறுத்த வேண்டும் - வடக்கு ஆளுநர், யாழ் அரச அதிபருக்கு முன்னணி மகஜர் - Yarl Voice

காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்தை இடமாற்றுவதை நிறுத்த வேண்டும் - வடக்கு ஆளுநர், யாழ் அரச அதிபருக்கு முன்னணி மகஜர்யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஆரம்பமாகிய குறித்த போராட்ட பிற்பகல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இறுதியில் குறித்த விடையம் தொடர்பான மகஜர் ஒன்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்துள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் சென்று மகஜர் ஒன்றினை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
.

0/Post a Comment/Comments

Previous Post Next Post