இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழப்பு - Yarl Voice இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழப்பு - Yarl Voice

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி சற்று அதிகரித்துள்ளது. இன்று 1,027 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post