நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பித்துள்ளது - Yarl Voice நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பித்துள்ளது - Yarl Voice

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பித்துள்ளது
ஆனால், வானிலை மாற்றம் காரணமாக திடீரென படப்பிடிப்புக்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், தளபதி 65 படத்தின் ஷெட்யூல் திட்டமிட்டப்படி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன. சென்னை பெருங்களத்தூரில் உள்ள சன் ஸ்டூடியோவில் சமீபத்தில் தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்டது. 

நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன், அபர்ணா தாஸ், கவின், விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டு தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தளபதி விஜய் அடுத்த நாளே ஜார்ஜியாவில் ஆரம்பமாகும் தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 

இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் விஜய் ஓப்பன் கிரவுண்டில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக அறிவித்தது.

இந்நிலையில், தற்போது ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்கு திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

 தளபதி 65 படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கி இருப்பதன் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

வெறும் 15 நாட்களில் ஜார்ஜியாவில் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு சென்னை திரும்பலாம் என நினைத்த படக்குழுவின் திட்டம் தற்போது செமையாக சொதப்பி உள்ளது. இதன் காரணமாக மேலும், 2 அல்லது மூன்று நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நீளும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

மழை கொடுமை மட்டுமின்றி உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து திட்டமிட்டப்படி தளபதி 65 படத்தின் ஷூட்டிங் முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகுமா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எல்லாம் நல்ல விதமாகவே நடக்கும் என்று எதிர்ப்பார்ப்போம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post