-கிறிஷ் மொறிஸ் வானவேடிக்கை- ராஜஸ்தான் ரோயலிடம் டில்லி கப்பிற்றல் வீழந்தது - Yarl Voice -கிறிஷ் மொறிஸ் வானவேடிக்கை- ராஜஸ்தான் ரோயலிடம் டில்லி கப்பிற்றல் வீழந்தது - Yarl Voice

-கிறிஷ் மொறிஸ் வானவேடிக்கை- ராஜஸ்தான் ரோயலிடம் டில்லி கப்பிற்றல் வீழந்தது
ஐபிஎல் தொடரின் 7 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.  இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி  8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.
துடுப்பாட்டத்தில் பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) மார்கஸ் ஸ்டாய்னிஸை (0) அடுத்தடுத்து வெளியேறினர். 
கப்டன் ரிஷப் பண்ட் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினர். அவர் 32 பந்தில் 9 பவுண்டரியுடன் 51 ஓட்டங்களையும் லலித் யாதவ் 20 ஓட்டங்களும், டாம் கர்ரன் 21 ஓட்டங்களும் எடுக்க 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை டில்லி அணி எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் உனத்கட் 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 148 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல் அணி 19.4 ஓவர்களில் 150 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் மில்லர் 62, திவேட்டியா 19, அடிக்க இறுதி பந்துப் பரிமாற்றங்களில் மொறிஸ் வானவேடிக்கை காட்டிய கிறிஸ்மொறிஸ் 18 பந்துகளில் 6 சிக்சர் அடித்து 36 ஓட்டங்கள் எடுக்க ராஜஸ்தான் ரோயல் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post