வடமராட்சி மீனவர்கள் மூவரைக் காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு - Yarl Voice வடமராட்சி மீனவர்கள் மூவரைக் காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு - Yarl Voice

வடமராட்சி மீனவர்கள் மூவரைக் காணவில்லை! பொலிஸில் முறைப்பாடுயாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான மீனவர்கள் மூவர் மீன்பிடிக்கச் சென்ற நிலையைில் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஒரு படகில் 47 வயதுடைய இருவர் மற்றும் 43 வயதுடைய ஒருவர் ஆகியோர் நேற்று முன்தினம் கற்கோவளம் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர்.

நேற்று காலை 8மணியளவில் அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும் என்றபோதிலும் அவர்கள் கரை திரும்பாததை அடுத்து ஏனைய மீனவர்கள் பல படகுகளில் அவர்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.

நீண்ட நேரமாகித் தேடியும் தேடுதல் முயற்சி பலனளிக்காமையால் தேடிச் சென்றவர்கள் கரை திரும்பியிருக்கின்றனர்.

இந்நிலையில், மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post