அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க தயாராகுங்கள் ! ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா ! - Yarl Voice அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க தயாராகுங்கள் ! ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா ! - Yarl Voice

அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க தயாராகுங்கள் ! ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா !நாட்டின் அதிகரித்துவரும் கோவிட் 19 தொற்றாளர்களின்  நிலைமையை கரூத்ததில் கொண்டு எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல நகரங்கள் உள்ளிருப்பு முடக்க நிலைக்கு தள்ளப்படும் சந்தர்ப்பங்கள் எழக்கூடும் எனவே  நாட்டு மக்கள் அனைவரும் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமிக்க தயாராவது நனமை பயக்கும் என ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார் 

நாம் மக்களை பயமுறுத்தவோ அல்லது அவர்களுக்கு நிலைமையை மறைக்கவோ தேவையில்லை ஆனால் எத்தகைய நிகழ்வுகளுக்கும் தயாராக இருப்பது மிக முக்கியமானது. 

அதேவேளை தேவையேற்படின் நாடு முழுவது சிகிச்சை நிலையங்களை அமைக்க ராணுவம் தயாராக உள்ளது எனவும் 10,000  மேலதிக வைத்தியசாலை படுக்கைகள் விநியோகிக்க தயார் நிலையில் உள்ளதாகவும், சிகிச்சைக்கு தேவையான பிராண வாயு இருப்பில் உள்ளதாக அதை தயாரிக்கும் நிறுவனங்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் ஜெனரல் சில்வா குறிப்பிட்டார். 

சில தரப்புகள் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிப்பதாகவும் அரச நிறுவனங்களால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் தகவல்களுக்கு செவிசாய்க்கும் படியும் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post