ஜேவிபிக்கும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கும் தொடர்பு - அமைச்சர் மகிந்தானந்த - Yarl Voice ஜேவிபிக்கும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கும் தொடர்பு - அமைச்சர் மகிந்தானந்த - Yarl Voice

ஜேவிபிக்கும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கும் தொடர்பு - அமைச்சர் மகிந்தானந்த
ஜேவிபிக்கும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கும் இடையிலான உடன்பாடுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனிற்கு காணப்பட்ட தொடர்புகள் குறித்த அனைத்து விபரங்களும் தெரியவந்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபிக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான இணக்கப்பாடுகள் குறித்து பல விபரங்கள் கிடைத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் ரிசாத்பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்?அவர் குறித்த அனைத்து ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள  மகிந்தானந்த அளுத்கமகே தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையை ஜேவிபி தேசியப்பட்டியலில் வேட்பாளராக நிறுத்தியமை குறித்து பாரதூரமான பிரச்சினை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

பல தீவிரவாத அமைப்புகள் ஜேவிபியுடன் உடனபாடடிற்கு வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் இது எதிர்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post