மக்கள் விடுதலைக் கூட்டணியின் மேதினக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - ஜேவிபி அறிவிப்பு - Yarl Voice மக்கள் விடுதலைக் கூட்டணியின் மேதினக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - ஜேவிபி அறிவிப்பு - Yarl Voice

மக்கள் விடுதலைக் கூட்டணியின் மேதினக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - ஜேவிபி அறிவிப்பு




திட்டமிட்டபடி மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெறும்என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் தெரிவித்தார்இன்று யாழ் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் எனினும் இந்த அரசாங்கமானது எமது மே தின நிகழ்வுகளை தடை செய்வதற்கு பல்வேறு விதத்திலும் முயன்று வருகின்றது

மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகிய நாங்கள் எந்த தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நினைவு கூறுவோம் என உறுதி கொண்டு உள்ளோம் என தெரிவித்ததோடு

மே மாதம் என்பது ஒரு விசேட ஒரு மாதமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மேதின நிகழ்வு இடம்பெறும் மாதமாகும்ம. முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான இறந்த உயிர்களை மக்கள் நினைவு கூரும் நாள்

எனினும் இந்த அரசாங்கமானது தற்போது கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த இரண்டு மே தினம் மற்றும் முள்ளிவாய்க்கால் தினத்தை தடுப்பதற்காகவே இந்த கொரோனா என்ற குழப்பத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறது

அதனால் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலே விஷேடமாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் என்பவர்கள் வேறநாட்டு மக்கள் இல்லைஎதிரிநாட்டு பிள்ளைகள் இல்லை எங்களது உள்ளங்கள் எங்களது சகோதரர்கள் அதனால் அந்தச் சகோதரர்களை நினைவு கூர்வதற்கு அந்த மக்களுக்கு உரிமைஇருக்கின்றது அந்த உரிமையை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது அதனால் இதற்கு எங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்

ஏனென்றால் அதாவது முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் அவர்கள் எதற்காகப் போராடினார்கள் என்பதல்ல பிரச்சினை எதற்காக போராடினாலும் கூட அவர்கள் எமதுநாட்டு மக்கள் வேறும் யாரும் இல்லை .மக்கள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு யாரும் தடுக்க முடியாது எனவே மக்களின் உரிமையை இந்த அரசாங்கம் நிலைநிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post