இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்புகளைப் பேணும் - இராஜாங்க திணைக்களம் - Yarl Voice இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்புகளைப் பேணும் - இராஜாங்க திணைக்களம் - Yarl Voice

இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்புகளைப் பேணும் - இராஜாங்க திணைக்களம்
இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிராந்தியத்துடன் தொடர்பைப் பேணுவதில் புலம்பெயர் அமைப்புகள் எங்கள் முக்கியத்துவம் வாய்ந்த சகாக்களாக விளங்குகின்றன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாங்கள் இலங்கை உட்பட தென்னாசியாவைச் சேர்ந்த பல புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வருகின்றோம் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்ட விவகாரங்கள் தொடர்பாக இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்களை நாங்கள் வரவேற்கின்றோம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post