யாழில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது - Yarl Voice யாழில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது - Yarl Voice

யாழில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைதுயாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசங்களில் நெடுங்காலமாக கெரோயின் ஐஸ் குடு கஞ்சா கடத்தல், விற்பனை செய்துவந்த பிரதான சூத்திரதாரியுடன் மூவர் கைது 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு குருநகர் பகுதியை  சேர்ந்தவர்கள் கடல் வழியாக போதைப் பொருட்களை  இலங்கைக்கு கடத்தி நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள்

இந்தியாவிலிருந்து கடல் வழியாக  யாழ் குடாநாட்டிற்கு கஞ்சா பொருட்களை யாழ் குடாநாட்டிற்கு கடத்தி வந்த தலைவர் உட்பட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் 

 யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலீஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன்  தலைமையிலான குழுவினருக்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கடத்தல் காரர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ7 கோடி ரூபா பெறுமதியான ஐஸ்கேரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் க பன்னிரெண்டு தடவைக்கு மேல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய இடங்களுக்கு தரை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த குழுவினர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்  மேனன் அணியினரால் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவுள் ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post