மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Yarl Voice மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Yarl Voice

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்வது தொடர் பான சுற்றிவளைப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றிவளைப்பு 24 மணி நேரமும் முன்னெடுக்கப் படுவதோடு மது அருந்தியுள்ளார்களா என பரிசோதனை செய்து பார்க்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு, மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு சிறைத்தண்டனை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post