சர்வதேச அளவில் கொரோனாவைரஸ் பரவல் அதிகரிப்பது குறித்து இலங்கை கவலை - Yarl Voice சர்வதேச அளவில் கொரோனாவைரஸ் பரவல் அதிகரிப்பது குறித்து இலங்கை கவலை - Yarl Voice

சர்வதேச அளவில் கொரோனாவைரஸ் பரவல் அதிகரிப்பது குறித்து இலங்கை கவலை
சர்வதேச அளவிலும் இலங்கையின் அயல்நாடுகளிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் குறித்து  கரிசனையடைந்துள்ளதாக  இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடுமையான தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இதுவே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் குறிப்பாக அயல்நாடுகளில்  கொரோனாவைரஸ் வேகமாக பரவுவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்என தெரிவி;த்துள்ள சவேந்திரசில்வா இலங்கைக்குள் வருபவர்களை இலக்குவைத்து நாங்கள் இறுக்கமான தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இதுவே காரணம் என தெரிவித்துள்ளார்.

இறுக்கமான நடைமுறைகளை தளர்த்தவேண்டும்என வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன ஆனால் சர்வதே மற்றும் ஆசிய பிராந்திய நடைமுறைகளை பார்க்கும்போது அதனை அடிப்படையாக வைத்து நாங்கள் முடிவுகளை எடுக்கின்றோம்என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post