அரசியல்வாதிகளிடம் பல தடவை கோரியும் பலனில்லை - தாமே களத்தில் இறங்கிய கிராம மக்கள் - Yarl Voice அரசியல்வாதிகளிடம் பல தடவை கோரியும் பலனில்லை - தாமே களத்தில் இறங்கிய கிராம மக்கள் - Yarl Voice

அரசியல்வாதிகளிடம் பல தடவை கோரியும் பலனில்லை - தாமே களத்தில் இறங்கிய கிராம மக்கள்ஒட்டங்கேணி பாலாவித்தாழ் இந்து, கிறிஸ்தவ மயானம், ஒட்டங்கேணி சனசமூக நிலைய மக்கள் இளைஞர்கள் இணைந்து  சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதி விவசாய நிலம், கடந்த யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்து வரும் நிலையில், விவசாய நிலங்கள் பற்றைக் காடாகி காணப்படுகிறது. 

ஒட்டங்கேணி மயானம் இவ் வீதி வழியாகவே செல்ல வேண்டியிருப்பதால் பெரும் சிறமங்களின் மத்தியிலேயே சடலம் கொண்டு செல்லப்படுவதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனை சீர் செய்து தருமாறு அரசியல் வாதிகள், பிரதேச சபையினரைக் கோரிய போதும் இவ் வீதி கண்டு கொள்ளப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தொடர்சியாக சிரமங்களை எதிர்நோக்கிய ஒட்டங்கேணி சனசமூக நிலைய வாழ் மக்கள், இளைஞர்கள் இணைந்து தமது சொந்த மியற்சியில் இவ் வீதியை இன்று பக்கோ இயந்திரம் மூலம் சிரமதானப் பணிகளை மேற்கொண்டு துப்பரவு செய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post