மியன்மாரில் செஞ்சிலுவை சங்க பணியாளர்களும் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு - Yarl Voice மியன்மாரில் செஞ்சிலுவை சங்க பணியாளர்களும் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு - Yarl Voice

மியன்மாரில் செஞ்சிலுவை சங்க பணியாளர்களும் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு



படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடையும் பொதுமக்களை காப்பாற்றிசிகிச்சை வழங்க முயலும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் மனிதாபிமான பணியாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என மியன்மாரின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இரண்டுமாதங்களாகின்ற நிலையில் மியன்மாரில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 

செஞ்சிலுவை பணியாளர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் தாக்கப்படுகின்றனர் பொதுமக்களை காப்பாற்ற முயலும்போது காயமடைகின்றனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் அச்சுறுத்தப்படுகின்றனர் தாக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ள செஞ்சிலுவை சங்கம் தங்களின் சொத்துக்களும் அம்புலன்ஸ்களும் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சுகாதார பணியாளர்களை ஒருபோதும் இலக்குவைக்ககூடாது,உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள மக்களை அவர்கள் சென்றடைவதற்கு தடையற்ற அனுமதி வழங்கப்படவேண்டும் என செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுவரை 2000க்கும் அதிகமானவர்களிற்கு உதவிகளை வழங்கியுள்ளதாக செஞ்சிலுவை சங்கம்தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post