பிராணவாயு மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் இன்றி தவிக்கும் இந்தியாவில் கோவிட் 19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200,000 ஐ எட்டியுள்ளது.
இதேவேளை வைத்தியசாலைகளில் 150 இறப்புகள் பதிவானால் அப்பகுதியில் அமைந்துள்ள மயாணங்களில் 600 க்கு மேற்பட்ட உடல்கள் எரியூட்டபடுவதாக சாட்சிகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி குறைந்த அளவிலான PCR பரிசோதனைகளால் கணக்கில் வராத தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகம் என அங்குள்ள வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து அனுப்பபட்ட உயிர்காக்கும் உபகரணங்கள் பிராண வாயு கொள்கலன்கள் தலைநகர் டெல்லியை சென்றடைந்துள்ளது. அதேவேளை 250 நோயாளிகளுக்கு ஒருவருடத்திற்கு பயன்படக்கூடிய பிராணவ வாயுவை செறிவாக்கிகளை பிரான்ஸ் அனுப்ப தயாராகின்றது என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து முதல் முறையாக 70 தொன் பிராண வாயு கொள்கலங்களை கொண்ட அதிவிரைவு புகையிரதம் டெல்லியை சென்றடைந்துள்ளது.இருப்பினும் 20 மில்லியன் மக்களை கொண்ட டெல்லியில் நிலைமை மிகமோசமான நிலையிலேயே உள்ளது
மிகபெரிய அளவிலான ஒன்று கூடல்கள், அதிக தொற்று வீதத்தைக்கொண்ட உருமாற்றமடைந்த கோவிட் 19 கிருமி மற்றும் குறைந்த அளவிலான தடுப்பூசி ஏற்றல் வீதம் ஆகியவற்றால் இவ்வாறான அவல நிலையை எட்டியுள்ள இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் 4000 பிராணவாயு செறிவாக்கிகளை அனுப்ப தயாராகி வருகிறத
Post a Comment