யாருக்கு தடுப்பூசி வழங்கல்? எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் - Yarl Voice யாருக்கு தடுப்பூசி வழங்கல்? எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் - Yarl Voice

யாருக்கு தடுப்பூசி வழங்கல்? எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல்
எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் திகதி மற்றும் இடம் தொடர்பில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் சம்பந்தப்பட்டவர் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக்கு தகவல் வழங்கப்படுமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இப்புதிய வழிமுறையானது சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் காலப்பகுதியில் நடைமுறைக்கு வரவுள்ளது. அத்துடன் தொலைபேசி இல்லாதவர்களுக்கு வேறு தொடர்பாடல் வழிமுறைகள் மூலம் தகவல் வழங்கப்படும்.

இதேவேளை முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் காலப்பகுதியிலும் இந்நடைமுறை செயல்படுத்தப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post