3 ஆவது ஒருநாள் போட்டி! பந்துவீச்சில் சமிரா மாஜாயலம் இங்கை 97 ஓட்டங்களால் வெற்றி - Yarl Voice 3 ஆவது ஒருநாள் போட்டி! பந்துவீச்சில் சமிரா மாஜாயலம் இங்கை 97 ஓட்டங்களால் வெற்றி - Yarl Voice

3 ஆவது ஒருநாள் போட்டி! பந்துவீச்சில் சமிரா மாஜாயலம் இங்கை 97 ஓட்டங்களால் வெற்றிபங்காளதேசுடனான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்களால் பங்களாதேஸை வீழ்த்தியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் குசல் பெரேரா அபாரமாக துடுப்பெடுத்தாடிய சதமடித்தார்.

சர்வதோச ஒருநாள் போட்டியில் 6 ஆவது சதத்தை நிறைவு செய்திருந்த குசல் பெரேரா 120 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தவிர, தனஞ்செய டீ சில்வா ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும், குணதிலக-39, குசல் மெண்டிஸ்-22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தஷ்கின் அஹமட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
287 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி ன களமிறங்கிய பங்களாதேஸ் அணி 42.3 பந்துப்பரிமாற்றத்தில் 189 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மோட்டாக் ஹூசைன் 51 மகமத்துல்லா 53 ஓட்டங்களை பெற்றனர். 

பந்து வீச்சில் இலங்கை சார்பில் துஸ்மந்த சமீரா 5, ஹசரங்க, மென்டிஸ் தலா ஒரு விக்கெட்டை வீழத்தினர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post