யாழில் அதிகரிக்கும் கொரோனா பரவல் -36 மரணங்கள்: 2729 தொற்றாளர்- - Yarl Voice யாழில் அதிகரிக்கும் கொரோனா பரவல் -36 மரணங்கள்: 2729 தொற்றாளர்- - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் கொரோனா பரவல் -36 மரணங்கள்: 2729 தொற்றாளர்-யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற வடக்கு மாகாண கொரோனா தடுப்பு  செயலணியின் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நேற்று இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனையின்படி யாழில் 27 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

யாழ்.மாவட்டத்தில் நேற்றுவரை தொற்றுக்குள்ளானோர்  2729 ஆக  காணப்படுகின்றது தற்போது வரை  36 மரணங்கள் பதிவாகியுள்ளன.

2526 குடும்பங்களைச் சேர்ந்த 6331 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post