ஐரோப்பா சம்பியன் லீக் போட்டி: வில்லாரியல் அணி சம்பியன் - Yarl Voice ஐரோப்பா சம்பியன் லீக் போட்டி: வில்லாரியல் அணி சம்பியன் - Yarl Voice

ஐரோப்பா சம்பியன் லீக் போட்டி: வில்லாரியல் அணி சம்பியன்
ஐரோப்பா சம்பியன் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று வில்லாரியல் அணி முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில், ஸ்பெனியின் வில்லாரியல் அணியும் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியின் 29 ஆவது நிமிடத்தில் வில்லாரியல் அணியின் ஜெரார்ட் மொரேனோ அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து போட்டியின் 55 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் எடின்சன் கவானி பதில் கோல் அடித்தார்.

இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது. இதன்பின் போட்டி நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கவில்லை.

இதனால் பெனால்டி முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நீண்ட நேரம் சென்ற பிறகு வில்லாரியல் 11-10 என வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post