மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதி பயணத்தடையில் தளரவில்லை - ஜூன் 7 அதிகாலை 4 மணிக்கே தளர்வு - Yarl Voice மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதி பயணத்தடையில் தளரவில்லை - ஜூன் 7 அதிகாலை 4 மணிக்கே தளர்வு - Yarl Voice

மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதி பயணத்தடையில் தளரவில்லை - ஜூன் 7 அதிகாலை 4 மணிக்கே தளர்வு




ஜூன் 07 வரை பயணத்தடை; அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு நடமாடும் சேவை; தொடர் தடுப்பூசி ஏற்றல் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் தொடர்ந்து நீடிப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன்.
 
கொவிட் தடுப்பு சிறப்பு செயலணி இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே, ஏனைய அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானத்தை நான் எடுத்தேன்.
 
பயணத்தடையின் காரணமாகப் பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணத்தடையை தளர்த்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் - கடந்த 25ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில், பொதுமக்கள் செயற்பட்ட விதமானது, நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளிக்பதைப் போன்றதாகவே அமைந்தது.

எனவே - நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தோல்வி அடைய கூடுமென்று ஏனைய அதிகாரிகளும் நானும் கருதுகின்றோம்.
 
அதன்படி - மே மாதம் 31ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் பயணத்தடையைத் தளர்த்துவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை இடைநிறுத்திவிடுவதற்கும்,

எதிர்வரும் நாட்களில் பொதுமக்களுக்கு அவசியமான பொருட்களை நடமாடும் விற்பனை சேவைகளின் மூலம் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
 
பயணத்தடை நடைமுறையில் உள்ள காலங்களில் அத்தியாவசிய சேவைகளைப் பெற மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி உண்டு.

வீதிகளில் பயணிக்கும்போது தொழில்புரியும் நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் தொழில் அடையாள அட்டையை கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கொவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் பொறுப்புடன் ஒத்துழைக்க வேண்டும் என நான் வேண்டிக்கொள்ளுகின்றேன்.
 
சைனோபாம் தடுப்பூசி வழங்குதல் மே மாதம் 08ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பொதுமக்கள், ஜூன் மாதம் 08ஆம் திகதி முதல், ஒரு மாத காலத்திற்குள், முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இடத்திலேயே இரண்டாவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
 
சுகாதார பிரிவு இனங்கண்டுள்ள ஏனைய மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடைமுறைப்படுத்துவது அவசியமானது என்பதனையும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post