கோவையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் பேசிய .ஸ்டாலின் - Yarl Voice கோவையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் பேசிய .ஸ்டாலின் - Yarl Voice

கோவையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் பேசிய .ஸ்டாலின்
கோயம்புத்தூரில் கொரோனா கவச உடையணிந்து  தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதித்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மிகப்பெரிய கோர தாண்டவத்தை ஆடியது. தமிழகத்தில் உச்சத்தைத் தொட்டிய கொரோனா பரவல் தற்போது மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன் பலனாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறைய துவங்கியுள்ளது. அதே வேளையில் கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கோவை மாவட்டத்தில் தினமும் 3,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் 38,000 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கபட்டுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று ஆய்வை முடித்துக்கொண்டு கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர 50 கார் ஆம்புலனஸ் வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அளிக்கப்படும்  சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் மு.கஸ்டாலின், ’PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.

முதல்வருடன் சுகாதார துறை அதிகாரிகளும் கவச உடை அணிந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்தரன், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, முதன்மை செயலாளர் உமாநாத், ஆட்சியர் நாகராஜன்  உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post