கூரைபிரித்து மூன்று கடைகளில் பயண கட்டுப்பாட்டில் திருட்டு -சந்தேக நபர் ஒருவர் கைது- - Yarl Voice கூரைபிரித்து மூன்று கடைகளில் பயண கட்டுப்பாட்டில் திருட்டு -சந்தேக நபர் ஒருவர் கைது- - Yarl Voice

கூரைபிரித்து மூன்று கடைகளில் பயண கட்டுப்பாட்டில் திருட்டு -சந்தேக நபர் ஒருவர் கைது-
வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார.

பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை வீதியில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டு இடம்பெற்றிருந்தது.

இந்த திருட்டுச் சம்பவங்க்களுடன் தொடர்புடைய சுழிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

திருட்டுச் சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள சந்தேக நபர், தான் தனியவே திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post