கொரோனாவால் காரைநகரில் குடுதம்பஸ்தர் ஒருவர் மரணம்! - Yarl Voice கொரோனாவால் காரைநகரில் குடுதம்பஸ்தர் ஒருவர் மரணம்! - Yarl Voice

கொரோனாவால் காரைநகரில் குடுதம்பஸ்தர் ஒருவர் மரணம்!
கொரோனா பாதிப்பு காரணமாக காரைநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் கொரோனாப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் சுகாதார நடவடிக்கைகளுக்கு முதலில் ஒத்துழைக்காத நிலையில் பின்னர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் கோப்பாய் கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பட்டுள்ளார்.

அங்கு உடல் நிலைப் பாதிப்பு அதிகரித்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இன்று அவருடைய சடலம் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post