அச்சம் இன்றி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள் - வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் - Yarl Voice அச்சம் இன்றி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள் - வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் - Yarl Voice

அச்சம் இன்றி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள் - வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள்



யாழ்.மாவட்டத்தில் 3 இலட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டிய நிலையில் மக்கள் அச்சமின்றி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில,

யாழ் மாவட்டத்தில் 50ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகளை ஏற்றுவதற்காக  11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

உலக நாடுகள் பலவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சினோபாம் தடுப்பூசி யாழ்ப்பாணத்திலும் வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இரண்டாவது தடுப்பூசியினை ஒரு மாத காலத்தின் பின்னர் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார.

0/Post a Comment/Comments

Previous Post Next Post