பயணத் தடையை தளர்த்தக் கூடாது - வைத்திய சங்கம் கோரிக்கை - Yarl Voice பயணத் தடையை தளர்த்தக் கூடாது - வைத்திய சங்கம் கோரிக்கை - Yarl Voice

பயணத் தடையை தளர்த்தக் கூடாது - வைத்திய சங்கம் கோரிக்கைகொவிட் தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்று விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய நிலைமையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது நல்லது அல்லவெனவும் அவ்வாறு செய்யும் போது மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து மரண எண்ணிக்கையும் உயர்வடையலாம் எனவும் இதனால் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்று அந்தச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post