தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம் -பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் - Yarl Voice தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம் -பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் - Yarl Voice

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம் -பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள்

 


தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பொதுமக்களை துன்புறுத்தவேண்டாம் என பொலி;ஸ்மா அதிபர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதும் போதும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதும்  பொதுமக்களை துன்புறுத்தும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் உயர் அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் பொதுமக்களை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொள்வதை காண்பிக்கும் வீடியோக்கள்  ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுடனான இணையவழி கலந்துரையாடலில் சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள பொலிஸ்மா அதிபர் அவ்வாறான நடவடிக்கைகளை தடுக்குமாறு சிரேஸ்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மத்தியில் பொலிஸாருக்கு உள்ள நற்பெயரிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களையும் வாகனங்களையும் சோதனை செய்யலாம் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களிற்கு எதிராக மாத்திரம் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post