குளிர்பாணத்தில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டி சாரதியிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு - Yarl Voice குளிர்பாணத்தில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டி சாரதியிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு - Yarl Voice

குளிர்பாணத்தில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டி சாரதியிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்கள் சாரதிக்கு மயக்க மருத்து கலந்த குளிர்பானத்தை வழங்கி தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை  பகுதியில் ஞாயிற்றுக் கிழமை  வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகச்சேரிக்கு  பயணித்துள்ளார்.

 அவ்வாறு பயணித்தவர்கள் சாவகச்சேரி  சந்தியில் ஓர் பைக்கேற் குளிர்பானம் அருந்தியுள்ளனர். அதன் பின்பு கைதடியூடாக கோப்பாய் வீதியில் பயணித்த சமயம் முச்சக்கர வண்டிச்  சாரதி மயக்கமுற்றுள்ளார்.

இவ்வாறு மயக்கமுற்றவரின் கழுத்தில் இருந்த 2தங்கப்பவுன் சங்கிலியை அபகரித்துக்கொண்டு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர் தப்பிச் சென்றுள்ளார். 

இதனால் வீதியோரம் இருந்த சாரதியை அந்த வீதி வழியாக பயணித்தவர்கள் முதலில் மது போதையில் வீழ்ந்து கிடப்பதாகவே எண்ணியதனால் தாமதித்தே வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

முச்சக்கர வண்டிச் சாரதி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post