தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினிகாந் - Yarl Voice தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினிகாந் - Yarl Voice

தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினிகாந்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்  படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் இன்று அவர் முதல் பணியாக தடுப்பூசி எடுத்து கொண்டார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. மேலும் விரைவில் அவர் ’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அதனை அடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சற்று முன் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post