யாழில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை சிப்பாய் உயிரிழப்பு - Yarl Voice யாழில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை சிப்பாய் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை சிப்பாய் உயிரிழப்பு

 

யாழில் பணியாற்றும் விமானப்படையை சேர்ந்தவர் விடுமுறைக்காக வீடு சென்று பணிக்குத் திரும்பிய சமயம் பேரூந்து விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தின்போது 
ஏ.எம்என் குணசேகரா,  வயது 33 என்னும் வெலிமடையைச் சேர்ந்த விமானப்படையை சேர்ந்தவரே உயிரிழந்தவராவார்.

விடுமுறையில் கண்டிக்கு சென்ற படையினரை  கடந்த 19ஆம் திகதி  யாழிற்கு கடமைக்கு   ஏற்றிவந்த பேரூந்தில் சாரதி அருகே இருந்த கம்பியில் இந்த விமானப்படை சிப்பாய் சாய்ந்து இருந்துள்ளார். 

இதன்போது  ஊரெழுப் பகுதியில் நாய் ஒன்று குறுக்க சென்றதனால் சாரதி திடீரெனப் பிறக் பிடித்த சமயம் இந்த விமானப்படை வீரர் தூக்கி வீதியில் வீசப்பட்டுள்ளார்.

இவ்வாறு வீதியில் வீசப்பட்ட விமானப்படை சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த விமானப்படை சிப்பாயின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி தமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post