கடும் காற்றினால் பப்பாசி தோட்டம் முற்றாக அழிவு -துயரத்தில் இளம் விவசாயி- - Yarl Voice கடும் காற்றினால் பப்பாசி தோட்டம் முற்றாக அழிவு -துயரத்தில் இளம் விவசாயி- - Yarl Voice

கடும் காற்றினால் பப்பாசி தோட்டம் முற்றாக அழிவு -துயரத்தில் இளம் விவசாயி-வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவைச் சேர்ந்த இளம் விவசாயி துiராசா தமிழ்ச்செல்வன் வயது-29) என்பவரின் பப்பாசி தோட்டம் கம் காற்றால் முற்றாக அழிந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்.

அவர் தனது தோட்டத்தில் இம் முறை 1000 ஆயிரம் பப்பாசிகளை வைத்து பராமரித்து இதுவரை ஐந்து இலட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில் 5 தடவைகள் மாத்திரமே பழங்களை விற்பனை செய்துள்ளார்

இந் நிலையில்  இன்று வீசிய கடும் காற்று காரணமாக அவரது தோட்டத்தில் 600 மேற்பட்ட மரங்கள் முறிந்து வீழந்துள்ளன.

இதனால் பெரும் நட்டமடைந்த நிலையில் விரக்கத்தியில்  காணப்படும் இவருக்கு சுமார் 20 இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்..

கொரோனா பயணத் தடை காரணமாக பப்பாசி பழங்களை விற்பனை செய்ய  முடியாத நிலையில் ஒவ்வொரு மரங்களிலும் அதிகமான பழங்கள் காணப்பட்டதாகவும்  இதன் காரணமாக மரங்கள் அதிக சுமையுடன் இருந்த நிலையில் இன்று வீசிய கடும் காற்று அந்த மரங்களை முறித்து சாய்த்துள்ளது எனத் தெரிவிக்கின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post