இலங்கையை துவம்சம் செய்தது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி -தொடரையும் இழந்து பரிதாபம்! - Yarl Voice இலங்கையை துவம்சம் செய்தது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி -தொடரையும் இழந்து பரிதாபம்! - Yarl Voice

இலங்கையை துவம்சம் செய்தது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி -தொடரையும் இழந்து பரிதாபம்!பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியிலும் 103 ஓட்டங்களால் படுதோல்வியடைந்து  தொடரையும் இழந்தது இலங்கை அணி 
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி இன்று பகல் இரவு போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்களில் 246 ஓட்டங்களை பெற்றது

இதையடுத்து மிக எளிதாக இலக்கான 247 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. 
இதனால் தாமதமான ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது 40 ஓவர்களில் 245 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்று இலக்கு திருத்தியமைக்கப்பட்டது.

எஞ்சிய 2 ஓவர்களில் 119 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதியில் 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குணதிலக 24 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிடி ஹாசன் 3 விக்கெட்டுக்களையும், முஷ்டாபிசூர் ரஹீம் 3 விக்கெட்டுக்களையும், சஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளையும் வென்றுள்ளதன் மூலம் பங்களாதேஷ் அணி 2:0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post