தடுப்பூசி போட வர்றாங்க... ஆற்றுக்குள் குதித்த கிராம மக்கள் - மருத்துவக் குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Yarl Voice தடுப்பூசி போட வர்றாங்க... ஆற்றுக்குள் குதித்த கிராம மக்கள் - மருத்துவக் குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Yarl Voice

தடுப்பூசி போட வர்றாங்க... ஆற்றுக்குள் குதித்த கிராம மக்கள் - மருத்துவக் குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி




உத்தரப்பிரதேச மாநிலம் சிசோடா கிராமத்துக்கு தடுப்பூசி போடுவதற்காக சுகாதார பணியாளர்கள் சென்றுள்ளனர். மருத்துவக் குழுவைக் கண்டதும் அந்த கிராமத்தில் இருந்த ஒரு குழுவினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அச்சப்பட்டு ஆற்றுக்குள் இறங்கிவிட்டனர்.

 மருத்துவக்குழுவினர் எவ்வளவோ போராடியும் அவர்கள் செவி கொடுத்து கேட்பதாக இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இறந்து விடுவோம் என்ற வதந்தியை நம்பி கிராம மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. 

சிசோடா கிராமத்தில் மொத்தம் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இதில்  8 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இது குறித்து பேசிய கிராம மக்கள், “ தடுப்பூசி போட்டபிறகு மக்கள் இறந்துள்ளனர். பெரிய நகரங்களில் பணிபுரியும் என்னுடைய நண்பர்கள் எனக்கு இவ்வாறு கூறினர்.

 எனது கேள்விகளுக்கு மருத்துவக்குழுவைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரிகள் சரியான பதிலளிக்காததால் இதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது மாமா டெல்லியில் பணிபுரிகிறார். இரண்டு டோஸ் போட்டுக்கொண்டும் அவர் இறந்துவிட்டார். இன்னும் என்ன ஆதாரம் வேண்டும் எனக் ஷிஷூபால் என்ற நபர் கேள்வி எழுப்புகிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் பேசுகையில், “ தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய்த் தொற்று ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? ஆர்வத்துடன் தடுப்பூசி எடுத்துக்கொண்டு பின்னர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் பக்கத்து கிராமங்களில் உள்ளனர். தடுப்பூசிக்கு அரசாங்கம் ஏன் அழுத்தம் கொடுக்கிறது. அதை யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு கொடுங்கள்” என்றார்.

இதுகுறித்து பேசிய ராகுல் திரிபாதி என்ற அதிகாரி, “தடுப்பூசி குறித்த நிறைய வதந்திகள் கிராம மக்களிடம் பரவி உள்ளன. மருத்துவக்குழு கிராமத்தை அடைந்தவுடன் எல்லோரும் ஓட்டம் எடுக்கத் தொடங்கினர். அவர்களை பின் தொடர்ந்து சென்றதால் ஆற்றுக்குள் இறங்கிவிட்டனர். கொரோனா தடுப்பூசி குறித்த முக்கியத்துவத்தையும் , தேவையையும் கிராம மக்களுக்கு எடுத்துக்கூறினோம். 

மேலும் தடுப்பூசி குறித்த கட்டுக் கதைகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டோம். அதன்பின்னரே 18 பேர் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

தடுப்பூசி குறித்த நன்மைகளை மக்களுக்கு எடுத்து கூறி வருகிறோம். தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முயற்சித்து வருகிறோம் என்றார்.

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

இந்தியாவில் ஜனவரி மாதம் இறுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 மார்ச் மாதம் இறுதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வந்தது.

 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. இதனையடுத்து மாநில அரசுகள் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

 இதனையடுத்து மே மாத தொடக்கத்தில் இருந்து 18-வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post