பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் : இராணுவத் தளபதி - Yarl Voice பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் : இராணுவத் தளபதி - Yarl Voice

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் : இராணுவத் தளபதிதற்போது நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து முடிவு செய்ய மே 25, 26 அல்லது 27ஆம் திகதிகளில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இன்று காலை இடம்பெற்ற ‘தெரண அருண’ நிகழ்ச்சியின் போதே அவர் இதைத் தெரிவித்தார். 

அதன்படி, அடுத்த வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கொவிட் -19 தடுப்பு செயலணி கூடும் போது சுகாதாரத் துறை எழுப்பியுள்ள சில பிரச்சினைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மருத்துவ சங்கம் (SLMA), அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உட்பட நான்கு மருத்துவ சங்கங்கள் 14 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post