கொரோனாவை கட்டுப்படுத்து மக்களைக் காப்பாற்றுவதை வட கொழும்பு துறைமுக சட்ட மூலமே அரசிற்கு முக்கியமானது - ராஜித சேனாரட்ன எம்பி குற்றச்சாட்டு - Yarl Voice கொரோனாவை கட்டுப்படுத்து மக்களைக் காப்பாற்றுவதை வட கொழும்பு துறைமுக சட்ட மூலமே அரசிற்கு முக்கியமானது - ராஜித சேனாரட்ன எம்பி குற்றச்சாட்டு - Yarl Voice

கொரோனாவை கட்டுப்படுத்து மக்களைக் காப்பாற்றுவதை வட கொழும்பு துறைமுக சட்ட மூலமே அரசிற்கு முக்கியமானது - ராஜித சேனாரட்ன எம்பி குற்றச்சாட்டு
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமில்லை மாறாக கொழும்பு துறைமுகநகர சட்டமூலமே அரசாங்கத்திற்கு முக்கியமான விடயம் என  ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரட்ண தெரிவித்துள்ளார்.

பல நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் 14 நாள் முடக்கலை கோரியுள்ளன என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதிலேயே அரசாங்கத்தின் கவனம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தடுப்பூசியின் நன்மைகளை அனுபவிக்கவேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ள அவர் மக்களின் உயிர்களிற்கு முன்னுரிமை அளித்து நீண்ட நாள் முடக்கலை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகநகர சட்டமூலத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏன் அவசரப்பட்டது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post