இஸ்ரேல் பலஸ்தீன் மீதான சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஐநா அனுமதி ! ஒத்துழைக்க மறுக்கும் இஸ்ரேல் ! - Yarl Voice இஸ்ரேல் பலஸ்தீன் மீதான சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஐநா அனுமதி ! ஒத்துழைக்க மறுக்கும் இஸ்ரேல் ! - Yarl Voice

இஸ்ரேல் பலஸ்தீன் மீதான சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஐநா அனுமதி ! ஒத்துழைக்க மறுக்கும் இஸ்ரேல் !இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவிற்கும்  இடையில் பதினொரு நாட்களாக நடைபெற்ற யுத்தத்தில் குற்றங்கள் இழைக்கப்பட்டதா  என ஆராயும் சர்வதேச விசாரணைகளுக்கு  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. காசா மற்றும் மேற்கு கரை பகுதிகள் மட்டுமன்றி இஸ்திரேல் பகுதியிலும் இடம்பெற்ற வன்முறைகளை விரிவாக ஆராய சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

காசா மீது மிகக்கொடூரமாக நடத்திய விமானக்குண்டு தாக்குதல் யுத்தக்  குற்றங்களுக்கு வழிகோலி உள்ளது எனவும் அதேவேளை ஹமாஸால் நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமை விதிகளை மீறிய செயல் எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லேட் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஜெனீவாவில்  நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்துள்ள இஸ்ரேல் தாம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மாடோம் என அறிவித்துள்ளது இந்த திமானம் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஓர் உதாரணம் எனவும் ஐ நா தீவிரவாத குழுவின் சார்ப்பாக செயல்படுகிறது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சாடியுள்ளார்.

ஐநாவால் கொண்டுவரப்பட்ட இந்த திர்மாணத்தால் தாம் மிகவும் கவலையடைவதாக இஸ்திரேலின் முக்கிய நண்பனான அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் ஐநாவுக்கான பலஸ்தீன குழுவினர் முன்வைத்த இத் தீர்மானம்  தொடர்பான வாக்கெடுப்பில் 24 நாடுகள் சார்பாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 

ஐக்கிய நாடுகளின் சுயாதீன கணக்கெடுப்பின் படி 68 குழந்தைகள் உட்பட 270 பலஸ்தீனியர்களும்,10 இஸ்ரேலியர்களும் 11 நாட்களாக நடந்த வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாக ஆணையர் பசேலேட் ஐநா அவையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post