உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என எவ்பிஐ உறுதி செய்துள்ளது – சரத்வீரசேகர - Yarl Voice உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என எவ்பிஐ உறுதி செய்துள்ளது – சரத்வீரசேகர - Yarl Voice

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என எவ்பிஐ உறுதி செய்துள்ளது – சரத்வீரசேகரஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என அமெரிக்காவின் எவ்பிஐ உறுதி செய்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எவ்பிஐயினரும் இலங்கை பொலிஸாரும் மேற்கொண்ட விசாரணைகள் இதனை உறுதி செய்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவ்பர் மௌலவி இலங்கையில் ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் என்பது விசாரணைகளின் போது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ள சரத்வீரசேகர தாக்குதலை மேற்கொண்ட குழுவின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமை நவ்பர் மௌலவி 2016 இல் தனது குழுவிற்குள் உள்வாங்கியுள்ளார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பு தொடர்பான கற்கை நெறிகளை அவர் இலங்கையில் நடத்தியுள்ளார்,என தெரிவித்துள்ள சரத்வீரசேகர அவரிடமிருந்து மீட்கப்பட்ட மடிக்கணிணிகளில் அவ்வாறான விடயங்கள் காணப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

மேளலவி நுவரேலியாவில் ஐஎஸ் பயிற்சி முகாமொன்றை நடத்தியுள்ளார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post