கன்று தாச்சி பசுவை இறைச்சிக்காக வெட்டிய காவாலிக்குழு கைது! - Yarl Voice கன்று தாச்சி பசுவை இறைச்சிக்காக வெட்டிய காவாலிக்குழு கைது! - Yarl Voice

கன்று தாச்சி பசுவை இறைச்சிக்காக வெட்டிய காவாலிக்குழு கைது!புங்குடுதீவு பகுதியில் கன்றுத்தாச்சி பசுவை இறைச்சியாக்கிய குழுவினரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புங்குடுதீவு 11 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்குச் சொந்தமான கன்றுத்தாச்சி பசுவொன்று நேற்று கடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தீவிர விசாரணைகளின்  பின்னர் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த நபரொருவர்  ஊர்காவற்துறைப் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டார்.
 
அத்துடன் அவரது வீட்டிலிருந்து  கேரளாக்  கஞ்சாவும் பொலிஸார் கைப்பற்றப்பட்டது. குறித்த நபர்   நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் மேற்படி; இறைச்சியை விற்பனை செய்வதற்கு உதவியிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவரின் சகோதரருக்குச் சொந்தமான பசுவொன்றும் சம்பவ இடத்திலிருந்து உயிரோடு மீட்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post