ஒரே மாதத்தில் ஓரே குடும்பத்தில் 03 பேர் கொரோனாவால் மரணம் -ஒரு வடருடத்தில் ஆறு பேர் பலி- - Yarl Voice ஒரே மாதத்தில் ஓரே குடும்பத்தில் 03 பேர் கொரோனாவால் மரணம் -ஒரு வடருடத்தில் ஆறு பேர் பலி- - Yarl Voice

ஒரே மாதத்தில் ஓரே குடும்பத்தில் 03 பேர் கொரோனாவால் மரணம் -ஒரு வடருடத்தில் ஆறு பேர் பலி-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் உட்பட ஓரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் ஒரு மாத காலத்திற்குள் மரணித்த சம்பவம் கிண்ணியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிண்ணியா புகாரியடியை வசிப்பிடமாகக் கொண்ட அப்துல் காதர் - கலீலுர் ரஹ்மான் கடந்த மாதம் 17 ஆம் திகதி கொரோனா தொற்றினால் மரணமானார்.

இவா சகோதரர் அப்துல் காதர் அமானுல்லா இம்மாதம் 7 ஆம் திகதி சவூதி அரேபியாவில் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு காலமானார். 

இந்நிலையில் இவரது மற்றுமொரு சகோதரரான அப்துல் காதர் முகம்மது இக்பால் கொரோனா தொற்று காரணமாக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.

இவர்களை விட  இவர்களது குடும்பத்தைச் சேர்ந்து மேலும் மூவர் கொரோனா தொற்று காரணமாக ஒருவருடத்தில் மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு ஆறு பேர் ஒரு குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியானமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post