போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி




போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இதனை தெரிவித்துள்ளார்.

முன்னரை விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – நோயாளிகளின் எண்ணிக்கை 12 வீதத்தினாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 28 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சுகாதார அதிகாரிகள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி  போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஸ்டிக்கர் முறை உட்பட நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்இதன் காரணமாக தனியார் அரசதுறையினர் அலுவலகத்திற்கு செல்ல முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்து இல்லாத போதிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானவர்கள் அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி பயணிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

நான்குமில்லியன் தனியார் தொழிலாளர்களில் மூன்றரை இலட்சம் பேர் வேலைக்கு செல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்த உயிரிழப்புகளை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவின் கணிததிறமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post