100 வீத வேகத்தில் பரவும் டெல்டா திரிவு வைரஸ்...! -அ.ம.அ.சங்கம் எச்சரிக்கை - Yarl Voice 100 வீத வேகத்தில் பரவும் டெல்டா திரிவு வைரஸ்...! -அ.ம.அ.சங்கம் எச்சரிக்கை - Yarl Voice

100 வீத வேகத்தில் பரவும் டெல்டா திரிவு வைரஸ்...! -அ.ம.அ.சங்கம் எச்சரிக்கை
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த டெல்டா வகை கொவிட் வைரஸால் தொற்றாளர்கள் சடுதியாக உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ் டெல்டா வைரஸ் 100 வீதம் வேகமாக பரவும் ஆபத்து மிக்கதென எச்சரித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியசர் வாசன் இரத்தினசிங்கமே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பிரித்தானியா, பிரேசில், அமெரிக்க திரிபுகள் இனம்காணப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவின் டெல்டா வைரஸ் தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த டெல்டா கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகமானது. ஆரம்ப காலத்தில் அடையாளம் காணப்பட்டதை விடவும் இது வித்தியாசமானது. அல்பா தொற்று 70 வீதம் பரவும் வேகத்தை கொண்டிருந்த நிலையில் அதனை விடவும் 30 வீதம் அதிகரித்து  100 வீதம் பரவும் வேகத்தை டெல்டா வைரஸ் கொண்டுள்ளமை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடையும் நிலையே உள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post