பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட நடிகை - Yarl Voice பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட நடிகை - Yarl Voice

பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட நடிகை
மலையாள நடிகை ரேவதி சம்பத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என ஒரு நீண்ட பட்டியலை தன்னுடைய பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார்.

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். 

அவரது மிகப் பெரிய படைப்புகளில் வாஃப்ட் என்ற குறும்படம் அடங்கும். இந்த் குறும்படம் அவர்  சினிமாவில் அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 2019-ல் `பட்னாகர்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார்.

இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 ``இவர்கள் என்னை பாலியல் ரீதியாக, உளவியல்ரீதியாக, உணர்வுரீதியாக, துன்புறுத்தியவர்கள். இந்தக் குற்றவாளிகளின் லிஸ்ட் இதோ" என்கிற ரேவதி, ஒன்று, இரண்டு, மூன்று என நம்பர் போட்டு 14 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்

இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது சிலர் இது விளம்பரத்திற்காக என்றும்  சிலர்  உடனே அவர்கள் மீது புகார் அளியுங்கள்’ என்று கருத்து தெர்வித்து உள்ளனர்.

ரேவதி சம்பத், இரண்டு வருடங்களுக்கு முன்பும் நடிகர் சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், 2016-ல் தனக்கு சித்திக்கால் நிகழ்ந்த பாலியல் தொல்லையை வெளிப்படுத்தியதோடு, `என் வயதிலுள்ள உங்கள் மகளுக்கு இப்படியொரு பாலியல் தொல்லை நேரிட்டால் என்ன செய்வீர்கள்' என்று கேட்டிருந்தார். அப்போதும் இவருடைய குற்றச்சாட்டுகளுக்கு ஒருபக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்தன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post