தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளிற்கு இந்தியாவின் ஆதரவை வெளியிட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் - Yarl Voice தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளிற்கு இந்தியாவின் ஆதரவை வெளியிட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் - Yarl Voice

தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளிற்கு இந்தியாவின் ஆதரவை வெளியிட்டார் இந்திய உயர்ஸ்தானிகர்
தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளிற்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான  சந்திப்பின்போதே  இந்திய உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி,அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், 

நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை  சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு;ள்ளனர்.
இந்திய இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post