யாழில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் போராட்டம் - Yarl Voice யாழில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் போராட்டம் - Yarl Voice

யாழில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் போராட்டம்
அரச தாதியர்கள் சங்கம் உள்ளடங்கலான "சுகாதாரத் தொழிற் சங்க ஒன்றிணைப்பு" இன்றையதினமும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம், துணை வைத்திய சேவை ஒருங்கிணைந்த அதிகார சபை, துணை வைத்திய சேவை ஒருங்கிணைந்த முன்னணி, அரச குடும் நல சுகாதார சேவை சங்கம், அரச தாதியர்கள் சங்கம், மேல் மாகாண சுகாதாரச் சேவை சாரதி சங்கம், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களின் சங்கம் மற்றும் அரச தொழிற்நுட்பவியலாளர் சங்கம் ஆகியன இணைந்து 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இந்த அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையிலேயே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இன்றையதினம் அடையாள  பணிபுறக்கணிப்பில்  ஈடுபட்டுள்ளதோடு  யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் பதாதைகளை ஏந்தியவாறு கவணயீர்ப்பு போராட்டத்திலும்  ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post