கொரோனா தடுப்பூசி போட்ட புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை பணியாளர்கள் 25 பேருக்கு ஒவ்வாமை - Yarl Voice கொரோனா தடுப்பூசி போட்ட புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை பணியாளர்கள் 25 பேருக்கு ஒவ்வாமை - Yarl Voice

கொரோனா தடுப்பூசி போட்ட புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலை பணியாளர்கள் 25 பேருக்கு ஒவ்வாமைபுதுக்குடியிருப்பு ஆடைத் தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இன்றைதினம் 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் பலர் தர்மபுரம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றியபோதும் மயங்கி விழுந்துள்ள பலர் மற்றும் வீடுகளில் இருந்த பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் இதுவரை 20 பேர் வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள்.

இச் சம்பவத்தினை தொடர்ந்து நிர்வாகம் ஆடைத்தொழில்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்தி பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது.

ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றி வரும் 1126 பேரில் இதுவரை 900 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post