அரசியல் கைதிகளின் விடுதலை மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காகவே - சிறிதரன் எம்பி - Yarl Voice அரசியல் கைதிகளின் விடுதலை மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காகவே - சிறிதரன் எம்பி - Yarl Voice

அரசியல் கைதிகளின் விடுதலை மரணதண்டனைக் கைதி ஒருவரின் விடுதலைக்காகவே - சிறிதரன் எம்பிஅரசியல்கைதிகள் 16 பேரின் விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி்யொருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகளின் உடைய விடுதலை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் சிறைகளில் இருக்கின்ற அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் அரசு விடுவிக்க வேண்டும்

சிறைகளில் வாடிய 16 அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழைத்த அனைத்து சமூகத்துக்கும் நன்றிகளை கூறும் அதே நேரம் சிறையிலே எதிர்காலத்தை தொலைத்து வாழுகின்ற அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் விடுதலைக்காக இந்த 16 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளமை ஒரு முலாம் பூசப்பட்ட ஒரு விடயமாகவே இது அமைந்திருப்பதாக கருதப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post