இலங்கையை வயிட்வோஷ் செய்தது இங்கிலாந்து அணி - Yarl Voice இலங்கையை வயிட்வோஷ் செய்தது இங்கிலாந்து அணி - Yarl Voice

இலங்கையை வயிட்வோஷ் செய்தது இங்கிலாந்து அணிஇங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 91 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை அணி 90 ஓட்டங்களால் பரிதாப தோல்லியடைந்தது.

3 போட்டிகளையும் வென்று இலங்கையை வயிட்வோஷ செய்தது இங்கிலாந்து.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் டேவிட் மாலன் 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் துஸ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

 தோடர்ந்து 181 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இல்கிலாந்து பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாது 18.5 பந்துப்பரிமாற்றத்தில்  91 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

துடுப்பாட்டத்தில் மினுரா பெர்ணான்டோ 20, ஓசாக பெர்ணாண்டோ 19 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்தின் டேவிற் வில்லி 3, சாம் ஹரன் 2, கிறிஸ்வோக், மொயின் அலி, ஜோர்டான், லிவிங்ரோன் தலா ஒருவிக்கெட்டை கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக டேவிற் மலன் தெரிவானார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post